செல்போன், லேப்-டாப் திருட்டு


செல்போன், லேப்-டாப் திருட்டு
x

ஜிப்மர் மாணவர் விடுதியில் செல்போன், லேப்-டாப் திருடு போயின.

புதுச்சேரி

கோரிமேட்டில் உள்ள ஜிப்மர் மருத்துவ கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருபவர் ஹரி கிருஷ்ணன் (வயது 21). அங்குள்ள விடுதியில் தங்கி இருந்து கல்லூரிக்கு சென்று வருகிறார். சம்பவத்தன்று தனது அறையை பூட்டாமல் ஹரிகிருஷ்ணன் கல்லூரிக்கு சென்று விட்டதாக தெரிகிறது. இந்தநிலையில் மாலையில் திரும்பி வந்து பார்த்தபோது அவரது அறையில் வைத்திருந்த செல்போன், லேப் டாப்பை காணவில்லை. இதன் மதிப்பு சுமார் ரூ.1 லட்சம் ஆகும். அறை பூட்டாமல் கிடந்ததை பயன்படுத்தி யாரோ திருடிச் சென்று இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து புகார் செய்யப்பட்டதன்பேரில் கோரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story