பஸ் டிரைவர் மீது தாக்குதல்
முதலியார்பேட்டையில் பஸ் டிரைவர் மீது தாக்குதல் செய்த 2 பேரையும் போலீசார் கைது செய்தார்.
புதுச்சேரி
அரியாங்குப்பம் அடுத்த மணவெளி பகுதியை சேர்ந்தவர் ஆனந்த் (வயது 28). தனியார் டிராவல்ஸ் நிறுவன டிரைவர். நேற்று முதலியார்பேட்டை பாரதிமில் அருகே உள்ள பெட்ரோல் பங்கில் பஸ்சுக்கு டீசல் நிரப்ப சென்றார்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த முருங்கப்பாக்கம் துலுக்கானத்தம்மன் நகரை சேர்ந்த ஆறுமுகம் (57), கணபதி (58) ஆகியோர் மீது பஸ் மோதுவது போல் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த 2 பேரும் சேர்ந்து பஸ் டிரைவர் ஆனந்திடம் தகராறு செய்து தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் காயமடைந்த அவர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைபெற்று வருகிறார். இதுகுறித்து முதலியார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் இனியன் வழக்குப்பதிவு செய்து ஆறுமுகம், கணபதி ஆகிய 2 பேரையும் கைது செய்தார்.
Related Tags :
Next Story