படுகை அணையை ஆக்கிரமித்த ஆகாய தாமரை


படுகை அணையை ஆக்கிரமித்த ஆகாய தாமரை
x

படுகை அணையில் ஆகாயத்தாமரை ஆக்கிரமித்துள்ளதால் சுண்ணாம்பாறு ஓடைபோல் காட்சியளிக்கிறது.

அரியாங்குப்பம்

படுகை அணையில் ஆகாயத்தாமரை ஆக்கிரமித்துள்ளதால் சுண்ணாம்பாறு ஓடைபோல் காட்சியளிக்கிறது.

படுகை அணை

புதுச்சேரி-கடலூர் மெயின் ரோட்டில் நோணாங்குப்பம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள சுண்ணாம்பாறு மீது பிரெஞ்சு காலத்தில் கட்டப்பட்ட மேம்பாலம் உள்ளது. அந்த பாலத்தின் கீழ் புதுச்சேரி அரசு பொதுப்பணித்துறை சார்பில் மழை நீரை சேகரிக்கும் விதமாக படுகை அணை கட்டப்பட்டுள்ளது.

இதனால் மழைநீர் வீணாக கடலுக்குள் செல்லாமல் இந்த படுகை அணையில் தேங்கி நிற்கிறது. மேலும் கடல்நீரும் ஆற்றில் கலக்காமல் பாதுகாக்கப்படுகிறது.

இதனால் அந்த அணையில் தேக்கி வைக்கப்படும் தண்ணீரை விவசாயத்திற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ஆக்கிரமித்த ஆகாயத்தாமரை

இந்தநிலையில் இந்த படுகை அணையை தற்போது ஆகாயத்தாமரை வளர்ந்து ஆக்கிரமித்துள்ளன. இதனால் தேக்கி வைக்கப்பட்டுள்ள நீரானது மாசுபடும் நிலை ஏற்படுகிறது. ஆகாயத்தாமரையும் நாளுக்கு நாள் புற்றீசல் போல் படர்ந்து வருவதால் சுண்ணாம்பாறு தற்போது ஓடைபோல் காட்சியளிக்கிறது.

இந்த படுகை அணையை தாண்டி தான் படகுகுழாம் அமைந்துள்ளது. மழை காலங்களில் இந்த ஆகாயத்தாமரை தண்ணீரில் அடித்து செல்லும் போது படகுகளில் சிக்கிக் கொள்ளும் நிலை உள்ளது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக படுகை அணையை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரையை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story