வேளாண் தொழில்நுட்ப பயிற்சி


வேளாண் தொழில்நுட்ப பயிற்சி
x

காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையத்தின் பயறுவகை தொகுப்பு முதல் நிலை செயல்விளக்க திடல் திட்டத்தின் கீழ் பண்டாரவடை கிராமத்தில் வயல் விழா நடைபெற்றது

காரைக்கால்

காரைக்காலை அடுத்த மாதூர் வேளாண் அறிவியல் நிலையத்தின் பயறுவகை தொகுப்பு முதல் நிலை செயல்விளக்க திடல் திட்டத்தின் கீழ் பண்டாரவடை கிராமத்தில் வயல் விழா நடைபெற்றது. விழாவுக்கு வேளாண் அறிவியல் நிலைய முதல்வர் ஜெயசங்கர் தலைமை தாங்கினார். வேளாண் அறிவியல் நிலைய கால்நடை மருத்துவர் கோபு அனைவரையும் வரவேற்றார்.

விவசாயி வைத்தியநாதன், பயறுவகை சாகுபடியில் வேளாண் அறிவியல் நிலையத்தின் மூலம் செயல்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்கள், அதனால் ஏற்பட்ட நன்மைகள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கி கூறினார்.

வேளாண் அறிவியல் நிலைய தொழில்நுட்ப வல்லுநர் (உழவியல்) அரவிந்த், ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை தொழில்நுட்பங்கள் குறித்து பயிற்சி அளித்தார். விழாவில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டு பயனடைந்தனர். இதற்கான ஏற்பாடுகளை வேளாண் அதிகாரி பாலசண்முகம் மற்றும் வேளாண் விரிவாக்க பணியாளர்கள் செய்திருந்தனர். முடிவில் தோட்டக்கலை துறை தொழில்நுட்ப வல்லுநர் கதிரவன் நன்றி கூறினார்.


Next Story