ஆச்சாரியா பொறியியல் கல்லூரியில் முப்பெரும் விழா


ஆச்சாரியா பொறியியல் கல்லூரியில் முப்பெரும் விழா
x

புதுச்சோியில் ஆச்சாரியா பொறியியல் கல்லூரியில் முப்பெரும் விழா நடைபெற்றது.

புதுச்சேரி

வில்லியனூர் ஆச்சாரியா பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் மாணவர்களுக்கான தடகளம் மற்றும் பலவித போட்டிகள், இறுதியாண்டு மாணவர்களுக்கான பிரிவுபசார விழா மற்றும் கல்லூரி ஆண்டு விழா என முப்பெரும் விழா நடைபெற்றது. பிரிவுபசார விழாவில் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சுரேஷ்குமார் (ஒளிப்பதிவாளர்), யஷ்வந்த் (சி.டி.எஸ்) கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். ஆண்டு விழாவில் மாணவி யுவஸ்ரி வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வர் சு.குருலிங்கம் ஆண்டறிக்கை வாசித்தார்.

தொடர்ந்து ஆச்சாரியா கல்விக் குழும நிர்வாக இயக்குனர் ஜெ.அரவிந்தன், பொறியியல் படிப்பின் கற்றல், அதன் முக்கியத்துவம் மற்றும் சமீபத்திய வேலை வாய்ப்புகள் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்ததுடன், ஆச்சாரியா பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் வரவிருக்கும் புதிய துறையான B.Tech-AI&DS அறிமுகப்படுத்தினார். நிறைவாக விளையாட்டு மற்றும் கலைநிகழ்ச்சியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

விழா ஏற்பாடுகளை கல்லூரியின் உடற்கல்வி இயக்குனர் குமரேசன், எந்திரவியல் துறை தலைவர் ஆனந்த், கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை தலைவர் கண்ணகி மற்றும் அனைத்து துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் செய்திருந்தனர். முடிவில் மாணவன் ரித்தாஜ் நன்றி கூறினார்.


Next Story