கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது


கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது
x

மேட்டுப்பாளையம் அரசு ஐ.டி.ஐ. அருகே கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் போலீசார் கைது செய்யப்பட்டனர்.

புதுச்சேரி

மேட்டுப்பாளையம் அரசு ஐ.டி.ஐ. அருகே 2 பேர் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசுக்கு தகவல் வந்தது. அதன்பேரில் மேட்டுப்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன் மற்றும் போலீசார் அங்கு விரைந்துசென்று அங்கிருந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், சண்முகாபுரத்தை சேர்ந்த ஜெயசூர்யா (வயது22), ஹரிஷ்குமார் (20) என்பதும், கஞ்சா விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 235 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.


Next Story