மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் கைது


மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் கைது
x

புதுச்சேரியில் மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி

கதிர்காமம் சொக்கநாதன்பேட்டையை சேர்ந்தவர் சண்முகம் (வயது44). இவர் வீட்டிலேயே சவுண்ட் சர்வீஸ் தொழில் செய்து வருகிறார். இவர் தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் வெளியே நிறுத்தியிருந்தார். பின்னர் சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது, மோட்டார் சைக்கிளை காணவில்லை.

சிறிது தூரத்தில் அவரது மோட்டார் சைக்கிளை 2 பேர் தள்ளிக் கொண்டு சென்றனர். இதையடுத்து அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் 2 பேரையும் பிடித்து கோரிமேடு போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர்கள், அய்யங் குட்டிப்பாளையம் ராஜேஷ் (27), வேல்ராம்பேட் தமிழன்பன் (37) என்பது தெரிய வந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மோட்டார் சைக்கிளையும் மீட்டனர்.


Next Story