மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 2 பேர் கைது
புதுச்சேரி லாம்பார்ட் சரவணன் நகரில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த இரு வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
மூலக்குளம்
ரெட்டியார்பாளையம் லாம்பார்ட் சரவணன் நகரில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் ரெட்டியார்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று கஞ்சா விற்றுக்கொண்டிருந்த 2 பேரை கையும், களவுமாக மடக்கி பிடித்தனர்.
விசாரணையில் அவர்கள், அதே பகுதியை சங்கர் (வயது 24), அருண் (25) என்பதும், மாணவர்களை குறி வைத்து கஞ்சா விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 250 கிராம் கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story