பிளஸ்-1 தேர்வை 14,758 மாணவ, மாணவிகள் எழுதினர்
புதுவை, கரைக்காலில் பிளஸ்-1 தேர்வை 14 ஆயிரத்து 758 மாணவ, மாணவிகள் எழுதினர். 595 பேர் தேர்வு எழுத வரவில்லை.
புதுச்சேரி
புதுவை, கரைக்காலில் பிளஸ்-1 தேர்வை 14 ஆயிரத்து 758 மாணவ, மாணவிகள் எழுதினர். 595 பேர் தேர்வு எழுத வரவில்லை.
பிளஸ்-1 தேர்வு
பிளஸ்-2 தேர்வுகள் நேற்று தொடங்கிய நிலையில் பிளஸ்-1 தேர்வுகள் இன்று தொடங்கின. இன்று மொழிப்பாட தேர்வுகள் நடந்தன. இந்த தேர்வுக்காக புதுச்சேரியில் 33 மையங்களும், காரைக்காலில் 10 தேர்வு மையங்களும் அமைக்கப்பட்டிருந்தன.
புதுவையில் இந்த தேர்வினை எழுத 12 ஆயிரத்து 864 பேர் விண்ணப்பித்திருந்தனர். ஆனால் அவர்களில் 432 பேர் தேர்வு எழுத வரவில்லை.
595 பேர் எழுதவில்லை
இதேபோல் காரைக்காலில் 2 ஆயிரத்து 497 பேர் விண்ணப்பித்திருந்தனர். ஆனால் 163 பேர் தேர்வு எழுதவரவில்லை. புதுவை-காரைக்காலில் ஒட்டுமொத்தமாக 14 ஆயிரத்து 758 மாணவ, மாணவிகள் இந்த தேர்வு எழுதினர். 595 பேர் தேர்வு எழுதவரவில்லை.
தேர்வுகளில் முறைகேடுகளை தவிர்க்க 5 பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டிருந்தன. மேலும் தேர்வு மையங்களில் தடையின்றி மின்சாரம் கிடைக்க ஜெனரேட்டர் வசதியும், பாதுகாப்புக்காக போலீசாரும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.