அ.தி.மு.க. சார்பில் நீர், மோர் பந்தல் திறப்பு


அ.தி.மு.க. சார்பில் நீர், மோர் பந்தல் திறப்பு
x

முத்தியால்பேட்டையி்ல் அ.தி.மு.க சார்பில் நீர், மோர் பந்தல் திறந்தனர்.

புதுச்சேரி

அ.தி.மு.க. சார்பில் முத்தியால்பேட்டை காந்தி வீதி பொன்னியம்மன் கோவில் எதிரே நீர், மோர் பந்தல் திறப்பு விழா இன்று நடந்தது. புதுவை மாநில துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் கலந்துகொண்டு நீர், மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு மோர், பழங்களை வழங்கினார்.

விழாவில் இணை செயலாளர் காசிநாதன், இளைஞரணி செயலாளர் விக்னேஷ் காசிநாதன், தொகுதி செயலாளர்கள் பழனிசாமி, கோபால், வில்லியனூர் மணி, கஜேந்திரன், நகர செயலாளர் பாஸ்கர், பொதுக்குழு உறுப்பினர்கள் செல்வம், மோகன், ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் சங்கர் உடையார், மாநில வர்த்தக அணி தலைவர் செல்வம், மாநில மீனவர் அணி துணை செயலாளர் விஸ்வநாதன், மாநில சிறுபான்மையினர் துணை தலைவர் அந்துவான், தொகுதி இணை செயலாளர் தனலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story