ஆதார் எண் இணைக்கும் சிறப்பு முகாம்


ஆதார் எண் இணைக்கும் சிறப்பு முகாம்
x

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் சிறப்பு முகாம் நடந்தது.

புதுச்சேரி

நாடு முழுவதும் போலிகள் இல்லாத வாக்காளர் பட்டியலை தயார் செய்ய தேர்தல் ஆணையம் தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காக வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

தலைமை தேர்தல் அதிகாரி ஜவகர் உத்தரவின்பேரில் வாக்குச்சாவடி அதிகாரிகள் வீடுவீடாக சென்று வாக்காளர்களின் ஆதார் எண்களை பெற்று வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்து வருகின்றனர். மேலும் www.nvsp.in என்ற இணையதள முகவரி வாயிலாகவும் ஆதார் எண்கள் இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் சிறப்பு முகாம் இன்று புதுவையில் உள்ள வாக்குச்சாவடிகளில் நடந்தது. இந்த முகாமில் வாக்காளர்கள் 6-பி படிவம் பெற்று அதில் கேட்கப்படும் தகவல்களை பூர்த்தி செய்து வழங்கினர்.

அதன் பின்னர் ஆதார் எண் வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கும் பணி நடந்தது. முகாம் இன்று மாலை 5 மணி வரை நடந்தது. இதில் ஏராளமான வாக்காளர்கள் கலந்துகொண்டு தங்கள் வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் எண்ணை இணைத்தனர்.


Next Story