அசாம், மத்திய பிரதேசத்தில் லேசான நிலநடுக்கம்

இந்த நிலநடுக்கங்கள் ரிக்டர் அளவில் 3.3, 2.8 ஆக பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
அசாம், மத்திய பிரதேசத்தில் லேசான நிலநடுக்கம்
Published on

புதுடெல்லி,

அசாமின் உதல்குரி பகுதியில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இரவு 7.54 மணியளவில் ரிக்டர் அளவில் 2.8 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

5 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 26.74 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 92.14 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் உடனடியாக வெளியாகவில்லை.

முன்னதாக, மத்திய பிரதேசத்தில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. மதியம் 2.53 மணியளவில் ரிக்டர் அளவில் 3.3 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

மத்திய பிரதேசம் மற்றும் அசாமில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டதன் காரணமாக அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com