டங்ஸ்டன் விவகாரம் குறித்து விவாதிக்க கோரி மக்களவையில் தி.மு.க. நோட்டீஸ்


டங்ஸ்டன் விவகாரம் குறித்து விவாதிக்க கோரி மக்களவையில் தி.மு.க. நோட்டீஸ்
x

கோப்புப்படம்

டங்ஸ்டன் விவகாரம் குறித்து விவாதிக்க கோரி மக்களவையில் திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் கனிமொழி நோட்டீஸ் வழங்கி உள்ளார்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 25-ந்தேதி தொடங்கியது. ஆனால் அதானி முறைகேடு பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களால் முதல் வாரத்தில் குறிப்பிடத்தக்க அலுவல்கள் எதுவும் நடக்கவில்லை. கடந்த வாரத்திலும் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் மட்டுமே இரு அவைகளும் முறைப்படி இயங்கின.

ஆனால் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அமெரிக்க தொழிலதிபர் ஜார்ஜ் சோரசின் அமைப்புடன் காங்கிரஸ் மற்றும் ராகுல் காந்திக்கு தொடர்பு இருப்பதாக கடந்த 5-ந்தேதி பா.ஜனதாவினர் இரு அவைகளிலும் குற்றம் சாட்டி இருந்தனர். இதைத்தொடர்ந்து அன்று முதல் இரு அவைகளும் மீண்டும் பெரும் புயலை எதிர்கொண்டு வருகின்றன. இது நேற்றும் தொடர்ந்தது. இதன்படி அதானி விவகாரம், காங்கிரஸ்-சோரஸ் தொடர்பு குற்றச்சாட்டுகளால் நாடாளுமன்ற இரு அவைகளும் நேற்றும் அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டன.

இந்நிலையில் டங்ஸ்டன் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தை ஒத்திவைத்து விவாதிக்க வேண்டும் என்று மக்களவையில் தி.மு.க. நாடாளுமன்றக் குழு தலைவர் கனிமொழி நோட்டீஸ் வழங்கி உள்ளார்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி காங்கிரஸ் கொறடா மாணிக்கம் தாக்கூரும் நோட்டீஸ் வழங்கி உள்ளார். டங்ஸ்டன் சுரங்க அனுமதியை ரத்து செய்யக் கோரி நேற்று தமிழ்நாடு சட்டசபையில் தீர்மானம் நிறைற்றப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story