ஜம்மு-காஷ்மீர்: பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் போலீஸ்காரர் பலி


ஜம்மு-காஷ்மீர்: பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் போலீஸ்காரர் பலி
x
தினத்தந்தி 29 Sept 2024 3:53 AM IST (Updated: 29 Sept 2024 1:54 PM IST)
t-max-icont-min-icon

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் போலீஸ்காரர் உயிரிழந்தார்.

ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீரில் 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 2 கட்ட தேர்தல் நடைபெற்ற நிலையில் இறுதிகட்ட தேர்தல் நாளை மறுதினம் நடைபெற உள்ளது. தேர்தலையொட்டி ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு பணிகள் பலப்படுத்தப்படுள்ளது.

இந்நிலையில், ஜம்முவின் கதுவா மாவட்டம் கோக் மண்ட்லி பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் போலீசார் மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் போலீஸ்காரர் உயிரிழந்தார். மேலும், 2 போலீசார் படுகாயமடைந்தனர். இதையடுத்து அப்பகுதிக்கு விரைந்த பாதுகாப்புப்படையினர் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story