ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கி கணக்குகள் வைத்திருந்தால் நடவடிக்கையா? மத்திய அரசு விளக்கம்
ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கி கணக்குகள் வைத்திருந்தால் நடவடிக்கை எடுக்கப்படுமா? என்பது குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
சென்னை,
பண பரிவர்த்தனைகள், மத்திய-மாநில அரசுகளின் நலத்திட்டங்களை பெறுவதற்கு வங்கி கணக்கு அத்தியாவசியமானமாக உள்ளது. இந்த சூழலில் ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்களிடம் அபராதம் விதிக்கப்படும் என, சமூக வலைத்தளங்களில் வைரலான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தநிலையில் சமூக வலைத்தளங்களில் உலா வந்த இந்த தகவலை மத்திய அரசு மறுத்துள்ளது. ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக ரிசர்வ் வங்கி வழிகாட்டுதல்கள் எதுவும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. இது போலியான தகவல் என்று மத்திய அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான பத்திரிகை தகவல் அலுவலக சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story