ஏற்றத்துடன் நிறைவடைந்த நிப்டி: இன்றைய பங்குச்சந்தை நிலவரம்


ஏற்றத்துடன் நிறைவடைந்த நிப்டி: இன்றைய பங்குச்சந்தை நிலவரம்
x

நிப்டி இன்று ஏற்றத்துடன் நிறைவடைந்தது.

மும்பை,

இந்திய பங்குச்சந்தையில் நிப்டி இன்று ஏற்றத்துடன் நிறைவடைந்தது. அதன்படி, 31 புள்ளிகள் உயர்ந்த நிப்டி 24 ஆயிரத்து 641 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.16 புள்ளிகள் ஏற்றம் பெற்ற சென்செக்ஸ் 81 ஆயிரத்து 526 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.

பின் நிப்டி ஏற்ற, இறக்கமின்றி 24 ஆயிரத்து 803 புள்ளிகளிலும், 48 புள்ளிகள் ஏற்றம் பெற்ற மிட்கேப் நிப்டி 13 ஆயிரத்து 133 புள்ளிகளிலும் வர்த்தகத்தை நிறைவு செய்தது.

அதேவேளை, 186 புள்ளிகள் சரிந்த பேங்க் நிப்டி 53 ஆயிரத்து 391 புள்ளிகளிலும், 191 புள்ளிகள் சரிந்த பேங்க் எக்ஸ் 60 ஆயிரத்து 767 புள்ளிகளிலும் வர்த்தகத்தை நிறைவு செய்தது.


Next Story