விழிகளில் ஏற்படும் வறட்சியை தடுக்கும் வழிகள்


விழிகளில் ஏற்படும் வறட்சியை தடுக்கும் வழிகள்
x
தினத்தந்தி 11 Sept 2022 7:00 AM IST (Updated: 11 Sept 2022 7:01 AM IST)
t-max-icont-min-icon

பால் உணவுகள், கீரை, முட்டை, மஞ்சள், ஆரஞ்சு பழங்கள் மற்றும் காய்கள் ஆகியவை கண்களின் ஆரோக்கியத்தை பராமரிக்கும் முக்கிய பொருட்கள். வைட்டமின் டி அதிகம் இருக்கும் உணவுப் பொருட் களையும் உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

வீன தொழில்நுட்பங்கள் பெருகியுள்ள இன்றைய காலகட்டத்தில், கண்கள் பாதுகாப்பு என்பது அனைத்து வயதினருக்கும் முக்கியமானது. கண்களில் உருவாகும் வறட்சி காரணமாக நமது கவனம் சிதறுவதுடன், தலைவலியும் உருவாக வாய்ப்பு இருக்கிறது.

இந்த சிக்கலில் இருந்து விடுபட கீழ்கண்ட எளிமையான வழிமுறைகளை கடைப்பிடிக்கலாம். இவை பொதுவான வழிமுறைகள் மட்டுமே. முறையான ஆலோசனைக்கு மருத்துவரை தொடர்பு கொண்டு அதன்படி செயல்பட வேண்டும்.

இரவில் நீண்ட நேரம் கண் விழித்திருத்தல், கணினி, செல்போன், டி.வி., பார்த்து விட்டு தூங்குவது போன்ற செயல்களால் கண்கள் மிகவும் பாதிப்படைகின்றன. அதனால், கண்களில் நீர் வடிதல், கண் எரிச்சல் ஏற்பட்டு வறட்சி ஏற்படுகிறது.

தினமும் எட்டு மணி நேர தூக்கம், ஆரோக்கியமான உணவு, ஓய்வு ஆகிய மூன்றையும் சரியாக கடைப்பிடித்தால் கண்கள் பாதிப்படையாமல் பாதுகாக்கலாம்.

எதிர்பாராத சூழ்நிலையில் கண்களில் தூசி விழுந்தால், தூய்மையான குளிர்ந்த நீரால் மட்டுமே கண்களை கழுவ வேண்டும். அந்த சமயத்தில் கண்களில் எண்ணெய் அல்லது சுய மருத்துவ முறையில்

ஏதாவது சொட்டு மருந்தை விடுவது போன்றவை ஆபத்தானது.

தொலைக்காட்சி, செல்போன் ஆகியவற்றை போதிய புற வெளிச்சம் உள்ள சூழ்நிலையில் மட்டுமே பார்க்க வேண்டும். இருட்டில் பார்க்கும்போது அதில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சு விழிப்படலத்தை பாதிக்கும்.

கணினியின் திரையை கண்பார்வைக் கோட்டிற்கு கீழ்ப்புறமாக அமையும்படி வைக்க வேண்டும். தொடர்ந்து கணினியை இயக்குபவர்கள் 20/20 என்ற முறையை கடைப்பிடிக்கலாம். அதாவது 20 நிமிடங்களுக்கு ஒரு முறை, 20 முறை கண்களை தொடர்ச்சியாக சிமிட்டுவதாகும். இவ்வாறு செய்வதால் கண்களில் ஈரப்பதம் பாதுகாக்கப்படும்.

கோடை காலத்தில் உடலிலும், கண்களிலும் வறட்சி ஏற்படும். இதைத் தடுப்பதற்கு அடிக்கடி தண்ணீர் குடிப்பது அவசியம். மருத்துவர் ஆலோசனைப்படி வாரம் ஒரு முறை எண்ணெய்க் குளியல் எடுத்துக் கொள்ளலாம். இதனால் உடல் சூடு விலகி, கண்கள் குளிர்ச்சி அடையும்.

கால்சியம், வைட்டமின்கள் நிறைந்த உணவு வகைகளை வாரத்தில் நான்கு நாட்களுக்கு சாப்பிடுவது கண்களுக்கு நல்லது. சிக்கன், மட்டன் போன்றவற்றை தவிர்த்து கடல் உணவுகளான மீன், இறால், போன்றவற்றை அவ்வப்போது சாப்பிடலாம். மீன் உணவுகள் கண்களுக்குத் தேவையான சத்துக்களை வழங்குகின்றன. அதனால் கண் பார்வை குறைபாடுகள் குணமாகும்.

பால் உணவுகள், கீரை, முட்டை, மஞ்சள், ஆரஞ்சு பழங்கள் மற்றும் காய்கள் ஆகியவை கண்களின் ஆரோக்கியத்தை பராமரிக்கும் முக்கிய பொருட்கள். வைட்டமின் டி அதிகம் இருக்கும் உணவுப் பொருட்

களையும் உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

வாரம் இரண்டு முறை கீரையை சமைத்து சாப்பிடலாம். பல்வேறு நிறங்களை கொண்ட காய்கறிகள், பழங்களை உணவில் சேர்த்துக் கொள்வதும் கண்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.


Next Story