உலக சுற்றுச்சூழல் தினம்


உலக சுற்றுச்சூழல் தினம்
x
தினத்தந்தி 6 Jun 2022 11:00 AM IST (Updated: 6 Jun 2022 11:00 AM IST)
t-max-icont-min-icon

சுற்றுச்சூழலை பாதுகாப்பதன் மூலம், ஆரோக்கியத்தை சீர்செய்யும் நோக்கிலும், பூமியின் அழிவைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் 1974-ம் ஆண்டில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 5-ந் தேதி ‘உலக சுற்றுச்சூழல் தினம்’ அனுசரிக்கப்படுகிறது.

'புவி வெப்பமயமாதல்' காரணமாக உலகில் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் என ஆய்வுகள் தெரிவித்து வருகின்றன. மனிதர்களின் செயல்பாடுகளால் அதிகமாக வெளியேற்றப்படும் கரியமில வாயு காரணமாக, புவியின் வெப்பநிலை அதிகரிக்கிறது. இதனால் வானிலை மாற்றம், துருவ பகுதிகளில் உள்ள பனிப்பாறைகள் உருகுதல் போன்ற இயற்கை மாற்றங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன.

இவற்றின் காரணமாக, பருவகால மாற்றங்களுடன் சேர்த்து, வாழ்க்கை முறையும் மாறிவருகிறது. இதன் விளைவாக ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது.

சுற்றுச்சூழலை பாதுகாப்பதன் மூலம், ஆரோக்கியத்தை சீர்செய்யும் நோக்கிலும், பூமியின் அழிவைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் 1974-ம் ஆண்டில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 5-ந் தேதி 'உலக சுற்றுச்சூழல் தினம்' அனுசரிக்கப்படுகிறது.

இந்த ஆண்டின் கருப்பொருள் 'சிறு தீவுகளும் கால நிலை மாற்றமும்' என்பதாகும். இதன் அடிப்படையில், 'குரலை உயர்த்து, கடல் மட்டத்தையல்ல' என்ற முழக்கம் எழுப்பப்படுகிறது. உலகையும், அதன் இயற்கை வளத்தையும் காப்பாற்ற வேண்டியது ஒவ்வொரு மனிதனின் அடிப்படைக் கடமை. இதனை உணர்ந்து நம்மால் சுற்றுச்சூழலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் நடந்துகொள்வதுடன், தூய்மையான மற்றும் பசுமையான உலகை அடுத்தத் தலைமுறைக்கு பரிசளிப்போம்.


Next Story