'கூழாங்கற்கள்' சுவர் அலங்காரம்


கூழாங்கற்கள் சுவர் அலங்காரம்
x
தினத்தந்தி 31 July 2022 7:00 AM IST (Updated: 31 July 2022 7:00 AM IST)
t-max-icont-min-icon

கூழாங்கற்களுக்கு இடையில் இருக்கும் இடைவெளிகளில் பசைத் தடவி, அதில் சிறு சிறு கற்களை ஒட்டி நிரப்பவும்.

தேவையானவை:

விதவிதமான கூழாங்கற்கள், பசை, காட்போர்டு, சிறிய மரச்சட்டங்கள், கருப்பு மற்றும் தங்க நிற பெயிண்ட், பிரஷ், தங்க நிற கிலிட்டர் டேப், ஸ்குரு, கயிறு.

செய்முறை:

1. 8x8 அங்குல நீளம் மற்றும் அகலத்தில், சதுர வடிவில் காட்போர்டை வெட்டிக்கொள்ளவும்.

2. அதைத் தொடர்ந்து காட்போர்டின் நான்கு ஓரங்களிலும் மரச் சட்டங்களை போட்டோ பிரேம் போன்று ஒட்டவும்.

3. கூழாங்கற்களில் பசை தடவி, காட்போர்ட் பிரேமிற்குள் முழுவதுமாக ஒட்டவும்.

4. கூழாங்கற்களுக்கு இடையில் இருக்கும் இடைவெளிகளில் பசைத் தடவி, அதில் சிறு சிறு கற்களை ஒட்டி நிரப்பவும்.

5. பின்னர், கற்களின் மீது கருப்பு நிற வண்ணம் தீட்டவும்.

6. அது நன்றாக உலர்ந்த பிறகு, பெரிய கூழாங்கற்களின் மீது தங்க நிற கிளிட்டர் பெயிண்ட் அடிக்கவும்.

7. பிரேமின் நான்கு புறமும் கோல்டு கிலிட்டர் டேப் ஒட்டவும்.

8. அதன் மேல் கருப்பு நிற வண்ணம் தீட்டவும்.

9. பிரேமின் பின்புறம் சிறிய ஸ்குருவை இணைத்து, அதில் கயிறு மாட்டி, சுவற்றில் தொங்க விடவும்.

இதுபோன்று உங்கள் கற்பனைத் திறனுக்கு ஏற்ப கற்களை வடிவமைத்து அலங்காரப்படுத்தலாம்.


Next Story