ஓணம் ஸ்பெஷல் 'ஜிமிக்கி கம்மல்'


ஓணம் ஸ்பெஷல் ஜிமிக்கி கம்மல்
x
தினத்தந்தி 4 Sept 2022 7:00 AM IST (Updated: 4 Sept 2022 7:00 AM IST)
t-max-icont-min-icon

ஜிமிக்கி கம்மல் செய்முறையை எளிய முறையில் தெரிந்து கொள்வோம்...

தேவையான பொருட்கள்:

ஜிமிக்கி மோல்டு

விரும்பிய வண்ணத்தில் பட்டு இழைகள்

தங்க நிற மணிகள்

வெள்ளை நிற கற்கள்

கேன்வாஸ் பேப்பர்

கம்மல் தண்டு

மெல்லிய கம்பி

பசை

செய்முறை:

1. ஜிமிக்கி மோல்டில் இருக்கும் துளையில் பட்டு இழையை நுழைத்துக்கொள்ளவும்.

2, 3 படத்தில் காட்டப்பட்டிருப்பது போல, பட்டு இழையை மோல்டில் இறுக்கமாக துளையில் நுழைத்து சுற்றிக்கொள்ளவும்.

4. முழுவதும் சுற்றி முடித்ததும் பசை கொண்டு பட்டுநூலின் முனையை மோல்டோடு சேர்த்து

நன்றாக ஒட்டிவிடவும். பின்னர் மீதமிருக்கும் பட்டு இழையைக் கத்தரித்து விடவும்.

5. பட்டு இழை சுற்றி இருக்கும் மோல்டின் மீது பசை தடவி, படத்தில் காட்டியுள்ளதுபோல தங்கநிற மணிகளை முழுவதுமாகச் சுற்றி நன்றாக உலர வைக்கவும்.

6. படத்தில் காட்டியுள்ளது போல ஜிமிக்கியின் மேல்பகுதியை, கேன்வாஸ் பேப்பரின் மீது தங்க நிற மணிகளையும், வெள்ளைக் கற்களையும் ஒட்டி உருவாக்கிக்கொள்ளவும்.

அது நன்றாக உலர்ந்த பிறகு தனியாகக் கத்தரித்து எடுக்கவும். அதன் பின்பகுதியில் கம்மல் தண்டை பசை கொண்டு நன்றாக ஒட்டவும்.

7. இப்போது ஜிமிக்கியையும், அதன் மேல் பகுதியையும் மெல்லிய கம்பி கொண்டு இணைத்தால், அழகான 'பட்டு இழை ஜிமிக்கி கம்மல்' தயார்.


Next Story