'காதல் என்பது பொதுவுடைமை' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு


காதல் என்பது பொதுவுடைமை படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
x
தினத்தந்தி 14 Dec 2024 9:37 PM IST (Updated: 14 Dec 2024 9:39 PM IST)
t-max-icont-min-icon

இயக்குநர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் உருவான 'காதல் என்பது பொதுவுடைமை' படம் அடுத்தாண்டு காதலர் தினத்தன்று வெளியாகவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இயக்குநர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் உருவான திரைப்படம் 'காதல் என்பது பொதுவுடைமை'. நவீன காதல் கதையைப் பேசும் படமாக உருவான இது கடந்தாண்டு கோவா திரைப்பட விழாவில் பங்கேற்று பாராட்டுகளைப் பெற்றது. முக்கிய கதாபாத்திரத்தில் லிஜோ மோல் ஜோஸ், வினீத், ரோகினி, அனுஷா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். நீண்ட நாள்களாக வெளியீட்டிற்குக் காத்திருந்த இப்படம் அடுத்தாண்டுகாதலர் நாளன்று பிப்ரவரி 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

'ஜெய் பீம்' நடிகை லிஜோ மோள் ஜோஸ் கதையின் நாயகிகளுள் ஒருவராக நடித்திருக்கிறார். இந்த திரைப்படத்திற்கு கண்ணன் நாராயணன் இசையமைத்திருக்கிறார். தன்பாலின சேர்க்கையாளர்களை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை மேன்கைன்ட் சினிமாஸ், சிமெட்ரி சினிமாஸ், நித்ஸ் புரொடக்சன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.

இப்படத்தை பிரபல மலையாள இயக்குநரான ஜியோ பேபி தயாரித்துள்ளார். ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் லென்ஸ், மஸ்கிடோ பிலாஸபி, தலைக்கூத்தல் ஆகிய படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story