ரசிகர்கள் அனைவரும் ரிங்டோனை மாற்றும் நேரம் வந்துவிட்டது - ஜி.வி.பிரகாஷ்


ரசிகர்கள் அனைவரும் ரிங்டோனை மாற்றும் நேரம் வந்துவிட்டது - ஜி.வி.பிரகாஷ்
x

அஜித்குமார் நடிக்கும் குட் பேட் அக்லி படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை,

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் தனது 63-வது படமான 'குட் பேட் அக்லி' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகன்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலானது.

இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தநிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 'குட் பேட் அக்லி' திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது இப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போகும் சூழல் உருவாகியுள்ளது. அதாவது, அஜித்தின் மற்றொரு படமான 'விடாமுயற்சி' பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருப்பதால் இப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போகும் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையில், குட் பேட் அக்லி படத்திலிருந்து இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் விலகியுள்ளார். அவருக்கு பதிலாக தற்போது பிரபல இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதனை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும் ஜி.வி.பிரகாஷ் குட் பேட் அக்லி படத்திற்கு இசையமைப்பது உறுதியாகிவிட்டது.

அதாவது, சமீபத்திய பேட்டி ஒன்றில் ஜி.வி.பிரகாஷ், "தற்போது நான் ஒரு பெரிய ஸ்டாரின் படத்திற்கு இசையமைத்து வருகின்றேன். அதனை நான் வெளிப்படையாக கூறமுடியாது. தயாரிப்பு நிறுவனம் அறிவித்த பிறகு தான் பேசமுடியும். அந்த ஸ்டாரின் படங்களின் பின்னணி இசையிலேயே, இப்படத்திற்காக உருவாகி இருக்கும் பின்னணி இசையாக மிகவும் சிறப்பாக இருக்கும். அவர்களின் ரசிகர்கள் அனைவரும் தங்களின் ரிங்டோனை மாற்றும் நேரம் வந்துவிட்டது" என்று பேசியிருக்கிறார்.


Next Story