ரூ. 300 கோடி பட்ஜெட்...சூர்யா, ராம் சரணை இயக்க 'தண்டேல்' இயக்குனருக்கு கிடைத்த வாய்ப்பு


Allu Aravind offers Chandoo Mondeti a Rs. 300 crore film with Ram Charan or Suriya
x

சூர்யா அல்லது ராம் சரணை வைத்து அடுத்த படத்தை இயக்க வாய்ப்பிருப்பதாக சந்து மொண்டேட்டி கூறி இருக்கிறார்.

சென்னை,

தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் சந்து மொண்டேட்டி . இவர் 'கார்த்திகேயா, பிரேமம், சவ்யசாச்சி, பிளடி மேரி, கார்த்திகேயா 2' உள்ளிட்ட படங்களை இயக்கி இருக்கிறார். தற்போது இவர் இயக்கியுள்ள படம் 'தண்டேல்'. இப்படத்தில் நாக சைதன்யா, சாய் பல்லவி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

அல்லு அரவிந்த் தயாரித்துள்ள இப்படம் வருகிற 7ம் தேதி தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில், சூர்யா அல்லது ராம் சரணை வைத்து அடுத்த படத்தை இயக்க வாய்ப்பிருப்பதாக சந்து மொண்டேட்டி கூறி இருக்கிறார். இது குறித்து அவர் கூறுகையில்,

'தண்டேல்' படத்தின் கதையைத் தயாரிப்பாளர் அல்லு அரவிந்திடம் கூறியபோது சூர்யா அல்லது ராம் சரணை வைத்து ஒரு படத்தை இயக்க வாய்ப்பு தருவதாகவும் அப்படத்திற்காக அவர் ரூ. 300 கோடி வரை செலவு செய்யத் தயாராக இருந்ததாகவும் கூறினார்' என்றார்.

இதனையடுத்து, இவரது அடுத்த படத்தில், சூர்யாவா? ராம் சரணா? அல்லது இருவருமே நடிப்பார்களா? என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர். சூர்யா தற்போது ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45வது படத்தில் நடித்து வருகிறார். அடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் 'வாடிவாசல்' படத்தில் நடிக்க உள்ளார்.


Next Story