காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காலமானார்
மருத்துவமனை சிகிச்சை பெற்றுவந்தநிலையில், சிகிச்சை பலனின்றி ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் (75) இன்று காலை 10:12 மணியளவில் காலமானார். அவரது மறைவுக்கு கட்சித் தலைவர்கள் பலரும் தங்களது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்த சூழலில் மணப்பாக்கத்தில் உள்ள ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் இல்லத்தில் அவரது உடலுக்கு உறவினர்கள் மற்றும் கட்சித் தலைவர்கள் அஞ்சலி செலுத்த உள்ளனர். தொடர்ந்து காங்கிரஸ் தலைமை அலுவலகமான சென்னை சத்தியமூர்த்தி பவனில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் உடல் நாளை தொண்டர்களின் அஞ்சலிக்கு வைக்கப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே ஈவிகேஎஸ். இளங்கோவன் மறைவு தொடர்பாக, மியாட் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், “ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் அவர்கள் 13 நவம்பர் 2024 அன்று அனுமதிக்கப்பட்டார். மருத்துவ பணியாளர்கள் எவ்வளவோ முயற்சி செய்த போதிலும் அவர் இன்று (14 டிசம்பர் 2024) காலமானார்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.