உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர், இப்போது... ... #லைவ் அப்டேட்ஸ்: டான்பாஸ் பிராந்தியத்தின் கடைசி நகரை பிடிக்க ரஷியா கடும் சண்டை
Daily Thanthi 2022-06-30 21:50:36.0
t-max-icont-min-icon

உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர், இப்போது கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பிராந்தியத்தை கைப்பற்றுவதற்கான போராக மாறி உள்ளது.

இந்த பிராந்தியத்தில் முக்கிய நகரங்களை ரஷியா கைப்பற்றியுள்ள நிலையில், கடைசி நகரமான லிசிசான்ஸ்க் நகரை முற்றுகையிட்டு கைப்பற்றுவதில் தீவிரம் காட்டி வருகிறது.

அங்கு தற்போது கடும் சண்டை நடந்து வருகிறது. டான்பாஸ் பிராந்தியத்தில் லுகான்ஸ்க் பகுதியில் 95 சதவீதமும், டொனெட்ஸ்க் பகுதியில் பாதியளவும் ரஷியாவின் கைகளுக்கு வந்து விட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

டான்பாஸ் பிராந்தியத்தில் கிட்டத்தட்ட முழுமையாக ரஷிய மொழிதான் பேசப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. டான்பாஸ் பிராந்தியத்தை கைப்பற்றுவது தொடர்பாக துர்க்மேனிஸ்தானில் நேற்று பேசிய ரஷிய அதிபர் புதின், “உக்ரைன் மீதான எனது நோக்கம் மாறி விடவில்லை. டான்பாஸ் பிராந்தியத்தை விடுவிப்பது, அங்குள்ள மக்களை பாதுகாப்பது, ரஷியாவின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் நிலைமைகளை உருவாக்குவதுதான் எனது நோக்கம் ஆகும்” என குறிப்பிட்டார்.


Next Story