நயன்தாரா விக்னேஷ்சிவன் திருமண விருந்து...! பலாப்பழ பிரியாணி முதல் பாதாம் அல்வா வரை...!


நயன்தாரா விக்னேஷ்சிவன் திருமண விருந்து...! பலாப்பழ பிரியாணி முதல் பாதாம் அல்வா வரை...!
x
Daily Thanthi 2022-06-09 08:56:33.0
t-max-icont-min-icon

டிகை நயன்தாராவின் திருமண விழா இன்று கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இன்று காலை திருமணம் முடிந்த நிலையில், தற்போது பிரபலங்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு மணமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்த நிகழ்வில் நடிகர்கள் ரஜினிகாந்த், ஷாருக்கான் உள்ளிட்டோர் நேரில் வந்து விக்கி - நயன் ஜோடியை வாழ்த்தினர்.

திருமணத்தை ஒட்டி இன்று மதியம் தமிழகம் முழுவதும் உள்ள ஆதரவற்றோர், முதியோர் இல்லங்கள், மற்றும் திருவண்ணாமலை உள்ளிட்ட முக்கிய கோயில்களில் ஏழை எளிய மக்களுக்கு கல்யாண விருந்தை வழங்க நட்சத்திர தம்பதிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.

இது ஒருபுறம் இருக்க இவர்களது திருமணத்தில் கலந்துகொண்ட பிரபலங்களுக்கு பரிமாறப்பட்ட உணவுகளின் பட்டியல் அடங்கிய மெனு வெளியாகி உள்ளது.

* பன்னீர் பட்டாணிக்கறி

* பருப்புக் கறி

* அவியல்

* மோர்க் குழம்பு

* மிக்கன் செட்டிநாடு கறி (வேகன் உணவு)

* உருளைக் கார மசாலா

* வாழைக்காய் வருவல்

* சேனக்கிழங்கு வருவல்

* சேப்பக்கிழங்கு புளிக்குழம்பு

* காளான் மிளகு வறுவல்

* கேரட் பீன்ஸ் பொரியல்

* காய் பொரிச்சது

* பொன்னி ரைஸ்

* பலாப் பழ பிரியாணி

* சாம்பார் சாதம்

* தயிர் சாதம்

* பூண்டு மிளகு ரசம்

* தயிர்

* பாதாம் அல்வா

* இளநீர் பாயாசம்

* கேரட் ஐஸ் கிரீம்


Next Story