தி.மு.க.வின் குடும்ப அரசியலால் தமிழ்நாட்டு... ... கச்சத்தீவை காங்கிரசும், தி.மு.க.வும் இலங்கைக்கு தாரைவார்த்தன - பிரதமர் மோடி தாக்கு
Daily Thanthi 2024-04-10 06:13:56.0
t-max-icont-min-icon

தி.மு.க.வின் குடும்ப அரசியலால் தமிழ்நாட்டு இளைஞர்கள் முன்னேறவில்லை - பிரதமர் மோடி

வேலூர் பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:-

தமிழ் புத்தாண்டு வரும் 14ம் தேதி பிறக்கிறது. அனைவரும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். தமிழ்நாட்டில் உள்ள வேலூர் மண் புதிய வரலாற்றை படைக்கப்போகிறது என்று டெல்லியில் இருப்பவர்களுக்கு தெரியாது. பா.ஜ.க.வுக்கும், தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் தமிழ்நாட்டில் மிகப்பெரிய ஆதரவு உள்ளது. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக எனது அனைத்து திறமைகளையும் நான் பயன்படுத்துவேன்.

தி.மு.க. என்பது குடும்ப நிறுவனம் போன்றது. தி.மு.க.வின் குடும்ப அரசியலால் தமிழ்நாட்டு இளைஞர்கள் முன்னேறவில்லை. தமிழ்நாட்டு கலாசாரத்திற்கு எதிராக தி.மு.க. செயல்படுகிறது.

மக்களை மொழி, மதம், சாதியால் பிரித்தாளும் வேலையை தி.மு.க. செய்கிறது. தி.மு.க.வின் செயல்பாடுகளை மக்கள் உணரும்போது அந்த கட்சி செல்லாக்காசாகிவிடும். காங்கிரசும், தி.மு.க.வும் கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்தன. இதனால், தமிழ்நாடு மீனவர்கள் கைது செய்யப்படுகிறார்கள். தமிழ்நாட்டு மீனவர்கள் 5 பேரை இலங்கையில் தூக்கு தண்டனையில் இருந்து காப்பாற்றியிருக்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story