வி.சி.க. தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள இரங்கல்... ... காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காலமானார் : நாளை இறுதிச்சடங்கு
Daily Thanthi 2024-12-14 06:44:28.0
t-max-icont-min-icon

வி.சி.க. தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி:

"காங்கிரஸ் பேரியக்கத்தின் சட்டமன்ற உறுப்பினரும் மேனாள் இந்திய மத்திய மந்திரியுமான அண்ணன் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் மறைவு பெருந்துயரத்தை அளிக்கிறது.

தனிப்பட்ட முறையில் என்மீது மிகுந்த பற்றுதலைக் கொண்டிருந்தவர். அவ்வப்போது தொடர்பு கொண்டு என்னை ஊக்கப்படுத்தியவர். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாமல் மனதில் பட்டதை பளிச்சென்று பேசக்கூடியவர்.

அவருடைய மறைவு தமிழக அரசியல் களத்திற்கு நேர்ந்த பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் யாவருக்கும் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்."


Next Story