திரைத்துறையில் உலக அளவில் உயரிய விருதாக ஆஸ்கர்... ... சிறந்த திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதை வென்ற ஓப்பன்ஹெய்மர்
Daily Thanthi 2024-03-11 00:53:15.0
t-max-icont-min-icon

திரைத்துறையில் உலக அளவில் உயரிய விருதாக ஆஸ்கர் உள்ளது. 1929ம் ஆண்டு முதல் ஆஸ்கர் விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. சிறந்த திரைப்படம், நடிகர், நடிகை, டைரக்டர், இசையமைப்பாளர் உள்பட பல்வேறு பிரிவுகளில் ஆஸ்கர் விருது வழங்கப்படுகிறது.

இந்நிலையில், 96வது ஆஸ்கர் விருது நிகழ்ச்சி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டொல்பி திரையரங்கில் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆஸ்கர் விருது விழாவிற்கு வருகை தந்த பிரபலங்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விழாவில் கலந்துகொள்வதற்காக திரைப்பிரபலங்கள் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் குவிந்துள்ளனர். ஆஸ்கர் விருது நிகழ்ச்சியில் சிறந்த திரைப்படம், சிறந்த டைரக்டர் உள்பட பல்வேறு பிரிவுகளில் கிறிஸ்டோபர் நோலனின் ஓப்பன்ஹெய்மர் திரைப்படம் அதிக ஆஸ்கர் விருதுகளை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது பல்வேறு பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. சுமார் 2 மணி நேரம் விழா நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story