இளம் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு சென்னை விமான நிலையத்தில் தமிழக அரசு சார்பில் உற்சாக வரவேற்பு!


இளம் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு சென்னை விமான நிலையத்தில் தமிழக அரசு சார்பில்  உற்சாக வரவேற்பு!
x
தினத்தந்தி 30 Aug 2023 10:21 AM IST (Updated: 30 Aug 2023 11:33 AM IST)
t-max-icont-min-icon

உலகக் கோப்பை செஸ் தொடரில் வெள்ளி வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

சென்னை,

உலகக்கோப்பை செஸ் போட்டி அசர்பைஜான் நாட்டிலுள்ள பெக்கு நகரில் நடைபெற்றது. இந்த தொடரின் இறுதிப்போட்டியில் உலகின் நம்பர் 1 வீரரும், ஐந்து முறை உலக சாம்பியனுமான நார்வே நாட்டின் மேக்னஸ் கார்ல்சன் - இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா மோதினர். இருவருக்கும் இடையிலான இறுதிப்போட்டியின் இரண்டு சுற்று போட்டிகளிலும் டிரா ஆன நிலையில், டைபிரேக்கர் சுற்று நடைபெற்றது. பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய இளம் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா தோல்வியை தழுவினார். பிரக்ஞானந்தா வெள்ளி பதக்கம் வென்றார். இது செஸ் உலகில் ஒரு குறிப்பிடத்தக்க சாதனை என்று பாராட்டப்படுகிறது.

இந்தநிலையில், செஸ் உலக கோப்பை தொடரில் 2-ம் இடம் பிடித்த பிரக்ஞானந்தாவிற்கு சென்னை விமான நிலையத்தில் தமிழக அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விளையாட்டு துறை செயலாளர் அதுல்யா மிஸ்ரா உள்ளிட்ட அதிகாரிகள் வரவேற்றனர்.

மயிலாட்டம், ஒயிலாட்டம், போன்ற கிராம கலைநிகழ்ச்சிகள் மூலம் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேளதாளம் முழங்க பிரக்ஞானந்தாவை ஊர்வலமாக அழைத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய வீரர்களும் தனியார் பள்ளி மாணவர்களும் வருகை தந்துள்ளனர்.


Next Story