கன்னி - வார பலன்கள்
நீதி, நேர்மையுடன் பழகும் கன்னி ராசி அன்பர்களே!
முயற்சியோடு செய்யும் பல காரியங்களில் முன்னேற்றமான பலன்களைப் பெறுவீர்கள். நண்பர்களும், உறவினர்களும், உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். தேவையான நேரத்தில் பணவரவு இருக்கும். அதிகச் செலவு இருந்தாலும், உங்களால் சமாளிக்க முடியும். உத்தியோகத்தில் பொறுப்புகளும், செல்வாக்கும் அதிகரிக்கும். உயரதிகாரிகளின் ஆதரவோடு முக்கிய சலுகைகளை அனுபவிப்பீர்கள். சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு பொருளாதார நிலை உயரும். என்றாலும் வேலைப்பளு அதிகரிக்க வாய்ப்புண்டு. கூட்டுத் தொழில் வியாபாரம் நன்றாக நடைபெற்று எதிர்பார்க்கும் லாபத்தை ெபற்றுத்தரும். பணியாளர்களின் முக்கிய தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி காணப்படும். கலைஞர்கள் பிரபல நிறுவனங்களில் இருந்து புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். பங்குச்சந்தை லாபம் தரும்.
பரிகாரம்:- இந்த வாரம் புதன்கிழமை, பெருமாளுக்கு துளசி மாலை சூட்டுவதுடன், நெய் தீபமும் ஏற்றுங்கள்.