கன்னி - வார பலன்கள்
தூய்மையான உள்ளம் கொண்ட கன்னி ராசி அன்பர்களே!
நன்மையும், தீமையும் கலந்த பலன்களே நடைபெறும். பூமியை விற்று கடன்களைத் தீர்க்கும் சூழ்நிலை உருவாகலாம். திருமணத்தடை உள்ளவர்களுக்கு நல்ல வரன்கள் வரும். வாகனங்களால் சிக்கல்கள் வரலாம். உத்தியோகஸ்தர்களில் சிலருக்கு எதிர்பார்த்தபடியே இடமாற்றம், பதவி உயர்வு போன்றவை கிடைக்கும். சக ஊழியர்களுடன் வீண் வாக்கு வாதங்களில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது. தொழில் செய்பவர்கள், தங்கள் துறையில் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். எனினும் அரசு வழியில் ஏதேனும் சிக்கல்கள் ஏற்படலாம். கூட்டுத் தொழில் வியாபாரத்தில் ஓரளவு திருப்தியான லாபத்தை அடைவீர்கள். கூட்டாளிகளோடு அனுசரணையாக செல்லுங்கள். கலைஞர்கள் சுமாரான முன்னேற்றத்தை காண்பீர்கள். கணவன் - மனைவி இடையே பரிவும், பாசமும் அதிகரிக்கும். வாகனத்தில் செல்லும்போது எச்சரிக்கை தேவை.
பரிகாரம்:- இந்த வாரம் சனிக்கிழமை, ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாத்தி வழிபாடு செய்யுங்கள்.