கன்னி - வார பலன்கள்
20-10-2023 முதல் 26-10-2023 வரை
நுண்ணறிவோடு செயல்படும் கன்னி ராசி அன்பர்களே!
எடுத்த காரியங்களில் திறமையுடன் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். பணிகளில் சிறு தடங்கல் இருந்தாலும், அதனை சாமர்த்தியமாக சரிசெய்வீர்கள். திட்டமிட்டபடி பணம் வரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்குப் பணிச்சுமை அதிகரிக்கும். பிறகு செய்யலாம் என்று தள்ளி வைத்த பணி ஒன்றை உடனே செய்ய வேண்டிய அவசியம் ஏற்படலாம். சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு வருமானம் அதிகரிக்கும். பணப்பொறுப்பில் உள்ளவர்களை கண்காணிப்பது அவசியம். கூட்டுத்தொழிலில் எதிர்பார்த்த வருமானம் காணப்படும். புதிய முதலீடுகள் குறித்த எண்ணம் மேலோங்கும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் வந்துபோகும். பெண்கள் அவற்றை சாமர்த்தியமாகச் சமாளித்து விடுவார்கள். கலைஞர்கள் புதிய வாய்ப்புகளில் பரபரப்பாக ஈடுபடுவர். பங்குச்சந்தையில் லாபம் பெற பொறுமை தேவை.
சிறப்புப் பரிகாரம்:- இந்த வாரம் புதன்கிழமை பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுங்கள்.