கன்னி - வார பலன்கள்
கவலைகளை மறைத்து மகிழும் கன்னி ராசி அன்பர்களே!
முக்கியமான பணியொன்றைச் செய்யும் முயற்சியில் ஓய்வின்றி உழைப்பீர்கள். வழியில் சந்தித்த நீண்ட கால நண்பர் ஒருவரால் வாழ்க்கையில் முக்கிய திருப்பம் ஏற்படலாம். பண வரவுகளில் பாதிப்பு இருந்தாலும், அவற்றை சாமர்த்தியமாக சமாளித்து விடுவீர்கள். உத்தியோகத்தில் பணியாற்றுபவர்கள் பேச்சைக் குறைத்து, பணிகளில் கவனம் செலுத்துவது நன்மை தரும். கடிதம் மூலம் வெளியூரில் இருந்து நல்ல தகவல் வந்து சேரும். சொந்தத் தொழில் செய்பவர்கள், வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்த கடுமையாக உழைப்பீர்கள். கூட்டுத் தொழிலில் பங்குதாரர் ஒருவரால் ஏற்பட்ட மனவேறுபாடு கலக்கத்தை தந்தாலும், நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெற, தடைகளைக் கடக்க நேரிடும். கலைஞர்கள், கருத்துவேறுபாட்டால் சில வாய்ப்புகளை நழுவ விடுவர்.
சிறப்புப் பரிகாரம்:- இந்த வாரம் வியாழக்கிழமை குரு பகவானுக்கு நெய் விளக்கேற்றி வைத்து வழிபடுங்கள்.