கன்னி - வார பலன்கள்
துன்பத்தை மறைத்து மகிழ்வாக பழகும் கன்னி ராசி அன்பர்களே!
நண்பர்களும், உறவினர்களும் ஆதரவாக இருப்பார்கள். பண வரவுகள் எதிர்பார்த்தபடி வந்தாலும், செலவுகள் அதிகமாகும். சில விஷயங்களில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள், தங்கள் பொறுப்புகளில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். நீங்கள் செய்யும் சிறிய தவறும், உயரதிகாரியால் கண்டனத்துக்குரியதாக மாறலாம். நண்பர்களுக்குள் சிறு மன வருத்தம் ஏற்படும்.
சொந்தத் தொழில் செய்பவர்கள், வேலைகளில் அதிக ஆர்வம் காட்டினாலும், குறித்த நேரத்தில் பணிகளை முடிக்க இயலாது. கூட்டுத் தொழில் செய்பவர்கள், கூட்டாளிகளிடம் சுமுகமாகவும், கவனமாகவும் பழகுவது நல்லது. பணப்பொறுப்பில் உள்ளவர்களை அடிக்கடி கண்காணிப்பது நன்மை தரும். குடும்பம் அமைதியாக நடைபெறும். சுபகாரியம் தள்ளிப்போகலாம். பங்குச்சந்தை லாபம் தரும்.
சிறப்புப் பரிகாரம்:- இந்த வாரம் வியாழக்கிழமை குரு பகவானுக்கு வில்வ இலையால் மாலை சூட்டுங்கள்.