சிம்மம் - வார பலன்கள்


சிம்மம் - வார பலன்கள்
x
தினத்தந்தி 27 Oct 2023 1:31 AM IST (Updated: 27 Oct 2023 1:32 AM IST)
t-max-icont-min-icon

27-10-2023 முதல் 2-11-2023 வரை

செயல்களில் முன் நிற்கும் சிம்ம ராசி அன்பர்களே!

வெள்ளிக்கிழமை முதல் சனிக்கிழமை காலை 8.15 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால், கடினமான சில காரியங்களில் தாமதங்களினால் மன சலிப்பு ஏற்படலாம். பயணங்களில் கவனமாக இல்லாவிட்டால் பிரச்சினைகளை சந்திக்க நேரலாம். உத்தியோகஸ்தர்களில் சிலருக்கு இடமாற்றம் ஏற்படலாம். சகப் பணியாளர்களிடம் சுமுகமாக நடந்துகொள்வது நல்லது. நாளைக்கு செய்ய நினைத்த செயலொன்றை இன்றே செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்படலாம். சொந்தத் தொழிலில் வேலைப்பளு அதிகரிக்கலாம். வாடிக்கையாளர்களுக்குக் குறிப்பிட்ட நேரத்தில், தயாரித்த பொருளைக் கொடுக்க இயலாமல் போகலாம். கூட்டுத்தொழிலில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்காமல் போகக்கூடும். குடும்பத்தில் சிறு சிறு பொருளாதார சிக்கல் ஏற்படலாம். கலைஞர்கள், அதிக முயற்சியின் பேரில் புதிய வாய்ப்புகளைப் பெறக்கூடும்.

சிறப்புப் பரிகாரம்:- இந்த வாரம் செவ்வாய்க்கிழமை முருகப்பெருமானுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள்.


Next Story