சிம்மம் - வார பலன்கள்
13-10-2023 முதல் 19-10-2023 வரை
எடுத்த காரியத்தை எளிதில் முடிக்கும் சிம்ம ராசி அன்பர்களே!
தீவிர முயற்சியுடன் சில காரியங்களைச் செய்து, அதில் முன்னேற்றமான பலன்களை அடைவீர்கள். வெற்றியடையாத காரியங்களுக்காக தக்க நண்பர்களின் உதவியோடு மீண்டும் முயற்சிப் பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள், விடுமுறையில் உள்ள சகப் பணியாளர்களின் வேலையையும் சேர்த்துச் செய்ய வேண்டிய நிலை ஏற்படலாம். சொந்தத்தொழில் செய்பவர்கள் நவீனமான கருவிகளின் துணைகொண்டு வேலையை விரைவாக செய்து முடிப்பர். கூட்டுத்தொழிலில் வியாபாரம் வழக்கம் போல லாபகரமாக நடைபெறும். வாடிக்கையாளர்களிடம் உள்ள பணத்தை வசூலிக்க முயற்சி மேற்கொள்வீர்கள். குடும்பத்தில் அவ்வப்போது ஏற்படும் சிறு சிறு பிரச்சினைகள், பெண்களால் சாமர்த்தியமாகச் சமாளிக்கப்படும். கலைஞர்கள் வாய்ப்புகளுக்காக சகக் கலைஞர்களின் உதவியை நாட வேண்டியதிருக்கும்.
சிறப்புப் பரிகாரம்:- இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை சூரியனுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள்.