சிம்மம் - வார பலன்கள்


சிம்மம் - வார பலன்கள்
x
தினத்தந்தி 6 Oct 2023 1:00 AM IST (Updated: 6 Oct 2023 1:01 AM IST)
t-max-icont-min-icon

6.10.2023 முதல் 12.10.2023 வரை

எடுத்த காரியங்களில் வெற்றிபெறும் சிம்ம ராசி அன்பர்களே!

அலுவலகத்தில் உங்களை நம்பி புதிய பொறுப்புகளை ஒப்படைக்கலாம். மற்றவர்களால் செய்ய முடியாத காரியம் ஒன்றை சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். உத்தியோகஸ்தர்கள் நிர்வாகத்திடம் வைத்த கோரிக்கை நிறைவேறலாம். இடமாற்ற முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். சொந்தத் தொழில் செய்பவர்கள் வியாபாரத்தில் நல்ல ஏற்றம் காண்பர். வாடிக்கையாளர்களிடம் இருந்து நிலுவைத் தொகை வசூலாகும்.

கூட்டுத்தொழிலில் வியாபாரம் நன்கு நடைபெறும். கூட்டாளிகளிடம் வீண் விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. பணம் கொடுக்கல் - வாங்கலில் கவனம் தேவை. குடும்பத்தில் அவ்வப்போது ஏற்படும் பிரச்சினைகளை சிக்கலின்றி சமாளித்து விடுவீர்கள். புதிய நவீனமான பொருட்களை வாங்கத் திட்டமிடுவீர்கள். கலைஞர்கள், புதிய வாய்ப்புகளைப் பெற முற்படுவீர்கள்.

சிறப்புப் பரிகாரம்:- இந்த வாரம் செவ்வாய்க்கிழமை துர்க்காதேவிக்கு செவ்வரளி மாலை சூட்டுங்கள்.


Next Story