சிம்மம் - வார பலன்கள்


சிம்மம் - வார பலன்கள்
x
தினத்தந்தி 8 Sept 2023 1:18 AM IST (Updated: 8 Sept 2023 1:18 AM IST)
t-max-icont-min-icon

முக்கிய பணிகளை கவனமாக செய்யும் சிம்ம ராசி அன்பர்களே!

வரவேண்டிய தன வரவுகளை வாக்கு சாதுர்யத்துடன் வசூலிப்பீர்கள். நிறுத்தி வைத்திருந்த காரியங்களை முக்கிய நண்பர்கள் உதவியுடன் செய்து முடிப்பீா்கள். உத்தியோகத்தில் கடமையைச் செய்வதில், கால நேரம் பார்க்காமல் ஈடுபட்டால்தான் வேண்டிய சலுகைகளைப் பெற முடியும். சகப் பணியாளரின் பணியையும் சேர்த்துச் செய்ய வேண்டியதிருக்கும். சொந்தத் தொழில் செய்பவர்கள் கையிலுள்ள பணிகளை முடிக்க முடியாமல் திணறும் நிலை ஏற்படலாம். கூட்டுத்தொழிலில் பணியாளர்கள், தங்களின் வேலையை ஒழுங்குபடுத்துவீர்கள். பணப் பாதுகாப்பை முன்னிட்டு நம்பிக்கையும், திறமையும் உள்ள நபரை, பணம் புழங்கும் இடத்தில் அமர்த்துவீர்கள். குல தெய்வ வழிபாட்டுக்கு குடும்பத்தோடு செல்லத் திட்டமிடுவீர்கள். கலைஞர்கள், பிரபல நிறுவனத்திலிருந்து வாய்ப்புகளைப் பெற்று மகிழ்வர்.

சிறப்புப் பரிகாரம்:- இந்த வாரம் சனிக்கிழமை அனுமனுக்கு வெற்றிலை மாலை அணிவித்து வழிபடுங்கள்.


Next Story