சிம்மம் - வார பலன்கள்


சிம்மம் - வார பலன்கள்
x
தினத்தந்தி 25 Aug 2023 1:08 AM IST (Updated: 25 Aug 2023 1:08 AM IST)
t-max-icont-min-icon

செயல்களை கலைநயத்துடன் செய்யும் சிம்ம ராசி அன்பர்களே!

உத்தியோகஸ்தர்கள், உயரதிகாரிகளிடம் வைத்த கோரிக்கை நிறைவேறும். நீண்டகால நண்பர் ஒருவர் அலுவலகம் வந்து உங்களை சந்திக்கலாம். அவசியமில்லாத பேச்சுகளால் அவதூறை சந்திக்க நேரிடும். சொந்தத் தொழில் செய்பவர்கள் சுறுசுறுப்பாகப் பணிகளில் ஈடுபடுவர். விரைவான செயல்பாட்டால், வாடிக்கையாளரின் பாராட்டைப் பெறுவீர்கள்.

கூட்டுத்தொழில் வியாபாரம் நன்றாக நடைபெறும். கூட்டாளிகளில் ஒருவர் பிரிந்து போய் சுயமாகத் தொழில் தொடங்கலாம். அதிக முதலீட்டுடன் நவீன தொழில் நுட்பம் அறிந்த புதிய கூட்டாளியைச் சேர்த்துக் கொள்வீர்கள். கூட்டாளிகளின் கணக்குகளை சரியாக வைத்திருப்பது பிரச்சினைகளை தவிர்க்கும். குடும்பத்தில் கணவன் - மனைவி ஒற்றுமை பலப்படும். கலைஞர்கள் பணிகளில் ஈடுபாட்டுடன் இருப்பார்கள்.

சிறப்புப் பரிகாரம்:- இந்த வாரம் சனிக்கிழமை அனுமனுக்கு வெற்றிலை மாலை சூட்டி வழிபாடு செய்யுங்கள்.


Next Story