சிம்மம் - வார பலன்கள்
நண்பர்களுக்கு உதவும் மனம் கொண்ட சிம்ம ராசி அன்பர்களே !
தள்ளிப்போட்ட காரியத்தை உடனே செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படலாம். திட்டமிட்ட பயணம் தவிர்க்க இயலாத காரணங்களால் ஒத்திவைக்கும்படி ஆகலாம். வயதானவர்களின் அறிவுரை வாழ்க்கையின் முக்கிய திருப்பத்திற்கு அஸ்திவாரமாக அமையும். உத்தியோகஸ்தர்கள் கடமைகளில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். புதிய பொறுப்புகளால் வேலைப்பளு அதிகரிக்கும். எதிர்பார்த்த கடன் தொகை தள்ளிப்போகும். சொந்தத்தொழிலில் எதிர்பார்க்கும் வருமானம் தாமதமாகும். வாடிக்கையாளர்களின் திருப்தியை சம்பாதிப்பது கடினம். கூட்டுத்தொழிலில் வருமானம் சுமாராகக் காணப்படும். குடும்பம் நன்றாக நடந்தாலும், அவ்வப்போது சிறுசிறு பிரச்சினைகளும் காணப்படும். கலைஞர்கள் புதிய வாய்ப்புகளைப் பெறுவர். பங்குச்சந்தையில் போதிய வருமானம் கிடைக்கும்.
சிறப்புப் பரிகாரம்:- இந்த வாரம் வியாழக்கிழமை குரு பகவானுக்கு வில்வ மாலை அணிவித்து வழிபடுங்கள்.