சிம்மம் - தமிழ் மாத ஜோதிடம்


சிம்மம் - தமிழ் மாத ஜோதிடம்
தினத்தந்தி 13 Feb 2023 10:21 AM IST (Updated: 13 Feb 2023 10:23 AM IST)
t-max-icont-min-icon

மாசி மாத ராசி பலன்கள் 13-02-2023 முதல் 14-03-2023 வரை

மனதில் நினைத்ததை மறுகணமே செய்து முடிக்கும் சிம்ம ராசி நேயர்களே!

மாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் அஷ்டமத்தில் குரு மறைந்திருந்தாலும் அவரது பார்வை 2, 4, 12 ஆகிய இடங்களில் பதிவாகின்றது. எனவே தேவைக்கேற்ப பணம் வந்துசேரும். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் நடப்பதற்கான அறிகுறிகள் தென்படும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். பயணங்கள் அதிகரிக்கும். ஒருசிலருக்கு இடமாற்றம், வீடு மாற்றம் வந்து சேரும். வீடு கட்டுவது அல்லது கட்டிய வீட்டைப் பழுது பார்ப்பது போன்றவற்றில் கவனம் செலுத்துவீர்கள். பார்க்கும் குருவைப் பலப்படுத்த, இக்காலத்தில் குரு வழிபாடு செய்தால் கூடுதல் நன்மை கிடைக்கும்.

உச்ச சுக்ரன் சஞ்சாரம்

மாசி 4-ந் தேதி மீன ராசிக்குச் செல்லும் சுக்ரனுக்கு, அது உச்ச வீடாகும். உங்கள் ராசிக்கு 3, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சுக்ரன், உச்சம் பெற்று குரு பகவானோடு சஞ்சரிப்பது யோகம்தான். திடீர் திடீரென பல நல்ல காரியங்கள் முடிவடையும். செல்வநிலை படிப்படியாக உயர்ந்து சேமிப்பை அதிகரிக்கச் செய்யும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு ஊதிய உயர்வும், பதவி உயர்வும் தானாக வரலாம். இதுவரை ஸ்தம்பித்து நின்ற தொழில், இனி வெற்றி நடைபோடும். பெண்களால் ஏற்பட்ட பிரச்சினைகள் அகலும்.

கும்ப - புதன் சஞ்சாரம்

மாசி 9-ந் தேதி, கும்ப ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு தன -லாபாதிபதியானவர் புதன். அவர் கும்பத்திற்கு சென்று உங்கள் ராசிநாதன் சூரியனோடு இணைந்து 'புத ஆதித்ய யோக'த்தை உருவாக்குகிறார். எனவே நினைத்தது நிறைவேறும். நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும். அனைத்து விதமான நன்மைகளும் அடுத்தடுத்து வந்துசேரும். தொழில் வளம் சிறப்பாக இருக்கும். புதிய ஒப்பந்தங்களிலும் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள்.

மீன - புதன் சஞ்சாரம்

மாசி 25-ந் தேதி மீன ராசிக்குச் செல்லும் புதன், அங்கு நீச்சம் பெறுகிறார். தனாதிபதி நீச்சம் பெறும் போது, தட்டுப்பாடுகள் அதிகரிக்கும். 'பொருளாதாரத்தில் பற்றாக்குறை ஏற்படுகின்றதே' என்று கவலைப்படுவீர்கள். குடும்ப உறுப்பினர்கள் உங்கள் மீது குற்றம் சுமத்துவர். வெளிநாடு செல்லும் முயற்சியில் தாமதம் ஏற்படும். இளைய சகோதரத்தோடு இணக்கம் குறையும். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காது.

மேஷ - சுக்ரன் சஞ்சாரம்

மாசி 29-ந் தேதி, மேஷ ராசிக்கு சுக்ரன் செல்கிறார். பாக்கிய ஸ்தானத்திற்கு சுக்ரன் வரும் பொழுது தடைகளும், தாமதங்களும் அகலும். தனித்து இயங்கும் சூழ்நிலை அமையும். பெண் பிள்ளைகளின் திருமணத்தை முன்னிட்டு சீர்வரிசைப் பொருட்களை வாங்கும் முயற்சி கைகூடும். அடகு வைத்த நகைகளை மீட்பீர்கள். வெளிநாட்டில் உள்ள நல்ல நிறுவனங்களில் பணிபுரிய அழைப்புகள் தேடி வரலாம். வாழ்க்கைத் தேவைகள் படிப்படியாகப் பூர்த்தியாகும். வீடு கட்டும் முயற்சி அல்லது சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள்.

மிதுன - செவ்வாய் சஞ்சாரம்

மார்ச் 30-ந் தேதி, மிதுன ராசிக்கு செவ்வாய் செல்கிறார். இக்காலத்தில் மிகுந்த கவனம் தேவை. விரயங்கள் அதிகரிக்கலாம். கடன் வாங்கிய இடத்தில் சில பிரச்சினைகள் உருவாகலாம். பூர்வீகச் சொத்துக்களிலும் சிக்கல்கள் ஏற்படலாம். தொழில் வளர்ச்சியில் குறுக்கீடுகள் உருவாகும். எலும்பு, நரம்பு சம்பந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படலாம். ஒரு கடனை அடைக்க மற்றொரு கடன் வாங்கும் சூழ்நிலை உருவாகும். அங்காரக வழிபாடு செய்வதன் மூலம் படிப்படியான முன்னேற்றங்கள் வந்துசேரும்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

பிப்ரவரி: 13, 14, 15, 25, 26, மார்ச்: 2, 3, 8, 9, 12, 13, 14.

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பச்சை.

பெண்களுக்கான பலன்கள்

இம்மாதம் பணத்தேவை உடனுக்குடன் பூர்த்தியாகும். பக்குவமாகப் பேசி காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. ஆதாயம் தரும் தகவல் அதிகம் கிடைக்கும். கணவன் - மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். பிள்ளைகளின் சுபகாரியப் பேச்சுக்கள் முடிவிற்கு வரலாம். பணிபுரியும் பெண்களுக்கு இனிமை தரும் விதத்தில் இடமாற்றங்கள் வந்துசேரும். ஒருசிலருக்கு வெளிநாட்டில் உள்ள நிறுவனங்களில் இருந்து அழைப்புகள் வரலாம். மாதக் கடைசியில் உடல்நலத்தில் கவனம் தேவை.


Next Story