மிதுனம் - வார பலன்கள்


மிதுனம் - வார பலன்கள்
x
தினத்தந்தி 9 Jun 2023 1:21 AM IST (Updated: 9 Jun 2023 1:22 AM IST)
t-max-icont-min-icon

ஆன்மிக நம்பிக்கை கொண்ட மிதுன ராசி அன்பர்களே!

புதிய நண்பர்களைச் சந்திப்பதால் மாற்றங்களைப் பெறுவீர்கள். வெள்ளிக்கிழமை காலை 10 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால் பணவரவு இருந்தாலும், செலவுகளும் இருக்கும். எதிலும் நிதானமான போக்கு அவசியம். உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் புதிய திருப்பம் ஏற்படும். பொறுப்புகள் கைமாறிப் போகும். வேறு இடங்களுக்கு திடீர் மாற்றம் ஏற்படும். உயர் அதிகாரிகளால் பாராட்டு கிடைக்கப் பெறலாம்.

சொந்தத் தொழிலில் எதிர்பார்த்த லாபம் பெற அதிக முயற்சிகள் தேவைப்படும். கூட்டுத் தொழிலில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்காமல் போகக்கூடும். கூட்டாளிகளில் ஒருவர் மனவேறுபாடு காரணமாகப் பிரிந்து செல்ல நேரலாம். குடும்பத்தில் சிறு சிறு தொல்லைகளைச் சந்திக்க நேருமாயினும், நன்றாகவே நடைபெறும். கலைஞர்கள் புதிய வாய்ப்புகளைப் பெற பொறுத்திருக்க வேண்டியது அவசியம்.

பரிகாரம்:- இந்த வாரம் வெள்ளிக்கிழமை அருகில் உள்ள அம்மன் சன்னிதியில் நெய் தீபம் ஏற்றி வைத்து வழிபடுங்கள்.


Next Story