மிதுனம் - வார பலன்கள்
27-10-2023 முதல் 2-11-2023 வரை
துணிவுடன் செயலாற்றும் மிதுன ராசி அன்பர்களே!
நல்ல திருப்பங்களைச் சந்திக்கும் வாரம் இது. பழைய பகை மறையும். குடும்ப உறவுகள் பலப்படும். சகோதர வழியில் லாபம் ஏற்படும். கடன் கட்டுக்குள் அடங்கி இருக்கும். ஆரோக்கியம் உற்சாகம் தரும். உத்தியோகத்தில் சிலருக்கு இடமாற்றம் ஏற்படலாம். பொறுப்புகள் அதிகரிக்கும். சொந்தத் தொழில் செய்பவர்கள், புதியநபர் மூலம் தொழிலில் முன்னேற்றத்தை அடையக் கூடும். வாடிக்கையாளரின் புதிய வேலையை, ஓய்வின்றி செய்து முடிக்க வேண்டிய நிலை ஏற்படும். கூட்டுத் தொழில் செய்பவர் களுக்கு வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். நவீனக் கருவிகள் கொண்டு செய்யும் புதிய தொழிலைத் தொடங்குவது பற்றி கூட்டாளிகளுடன் ஆலோசிப்பீர்கள். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும். கலைஞர்கள் புதிய வாய்ப்புகளைப் பெற்று, அவற்றில் ஈடுபாடு காட்டுவார்கள்.
சிறப்புப் பரிகாரம்:- இந்த வாரம் செவ்வாய்க்கிழமைமுருகனுக்கு சிவப்பு வண்ண மலர் மாலை சூட்டுங்கள்.