மிதுனம் - வார பலன்கள்
20-10-2023 முதல் 26-10-2023 வரை
கவலையை மறைக்கும் மிதுன ராசி அன்பர்களே!
உங்கள் முயற்சிகள் பலவற்றில் முன்னேற்றமான போக்கு தென்பட்டாலும், ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் சந்திராஷ்டமம் உள்ளதால், தடை, தாமதங்கள் ஏற்படுவதைத் தவிர்க்க இயலாது. கடிதம் மூலம் திடீர் பயணம் உருவாகலாம். எதிர்பார்த்த கடன் உதவி கிடைக்க சிறிது உழைக்க வேண்டியதிருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள், தங்கள் பதிவேடு களையும், பொறுப்பில் உள்ள இதரப் பொருட்களையும் பாதுகாப்பாக வைத்துக் கொள்வது அவசியம். சொந்தத் தொழிலில் வேலைப்பளு அதிகரிக்கும். புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகம் பலன் அளிப்பதாக அமையும். கூட்டுத்தொழிலில் போதுமான வருமானம் வந்துசேரும். குடும்பத்தில் எதிர்பார்த்த சுபகாரியம் தள்ளிப்போகலாம். மறைமுக எதிர்ப்பு விலகும். கலைஞர்களுக்கு எதிர்பார்க்கும் ஆதாயம் கிடைக்காது. பங்குச்சந்தை சுமாராக நடைபெறும்.
சிறப்புப் பரிகாரம்:- இந்த வாரம் வியாழக்கிழமை குரு பகவானுக்கு கொண்டைக் கடலை மாலை சூட்டுங்கள்.