மிதுனம் - வார பலன்கள்
6.10.2023 முதல் 12.10.2023 வரை
கலை உணர்வுடன் செயல்படும் மிதுன ராசி அன்பர்களே!
வெளிவட்டாரத் தொடர்புகள் மூலம் பயன்பெறும் வாரம் இது. தொழில் ரீதியான அலைச்சல்கள் இருந்தாலும், ஆதாயமும் உண்டு. பேசும் போது கவனம் தேவை. கொடுக்கல் - வாங்கலில் நாணயத்தை காப்பாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் ஆதரவோடு சில முக்கிய காரியங்களை செய்து முடிப்பீர்கள். வீண் பேச்சு பிரச்சினையை தரலாம்.
சொந்தத் தொழில் செய்பவர்கள் வாடிக்கையாளர்களிடம் பொறுமையுடன் நடந்து கொள்ளுங்கள். தொழிலில் போட்டி இருக்கலாம். கூட்டுத்தொழிலில் ஓரளவு லாபம் ஏற்படும். எதிலும் நிதானமாக நடந்துகொள்வது அவசியம். குடும்பத்தில் நன்மையும், தொல்லையும் கலந்து காணப்படும். கலைத்துறையினர் பணிகளில் கறுசுறுப்பாக இருப்பர். பங்குச்சந்தை வியாபாரத்தில் நண்பர்களின் ஆலோசனை பலன்தரும்.
சிறப்புப் பரிகாரம்:- இந்த வாரம் வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபமிட்டு வழிபடுங்கள்.