மிதுனம் - வார பலன்கள்
வேலைவாங்கும் திறன்மிக்க மிதுன ராசி அன்பர்களே!
உறவினர் மற்றும் நண்பர்களிடம் இருந்து உதவி கிடைப்பதால், பிரச்சினைகள் ஓரளவு தீரும். இருப்பினும் எதிர்பார்த்த தொகைக்காக பெரும் அலைச்சலை சந்திக்க நேரிடும். செலவுகள் அதிகமாகி மன உளைச்சலை உண்டாக்கும். எதிர்கால வாழ்விற்கு ஏற்ற திட்டங்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள்.
உத்தியோகத்தில் உயரதிகாரிகளின் ஆதரவால் நலம் பல சேரும். சொந்தத்தொழில் செய்பவர்கள், புதிய நபரின் அவசர வேலையை செய்து கொடுக்க ஓய்வின்றி பணியாற்றுவீர்கள். மூலப் பொருள் தட்டுப்பாட்டால் தொல்லை ஏற்படலாம். கூட்டுத் தொழிலில் வழக்கமான லாபம் குறையாது. குடும்பம் சிறுசிறு பிரச்சினைகளுடன் நடைபெறும். வாகனங்கள் பழுதடைந்து செலவுக்கு வழிவைக்கும். கலைஞர்கள், பணிகளில் உற்சாகமாக ஈடுபட்டாலும் வருமானம் போதுமானதாக இருக்காது.
சிறப்புப் பரிகாரம்:- இந்த வாரம் செவ்வாய்க்கிழமை முருகனுக்கு, கந்தசஷ்டி கவசம் பாடி வழிபடுங்கள்.