மேஷம் - வார பலன்கள்


மேஷம் - வார பலன்கள்
x
தினத்தந்தி 23 Jun 2023 2:17 AM IST (Updated: 23 Jun 2023 2:22 AM IST)
t-max-icont-min-icon

துணிவோடு காரியங்களில் ஈடுபடும் மேஷ ராசி அன்பர்களே!

வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். மற்றவர்களுக்காகச் சில பொறுப்புகளை ஏற்பீர்கள். திட்டமிட்ட பயணங்களைத் தள்ளிவைக்கும் சூழல் உருவாகும். உத்தியோகஸ்தர்கள் நினைத்தது நடைபெறும். பண உதவிக்கான முயற்சிகளில் நல்ல பலன் கிடைக்கும். விடுமுறையில் சென்றிருக்கும் சகப் பணியாளரின் வேலையையும் சேர்த்து செய்வீர்கள்.

சொந்தத் தொழில் செய்பவர்கள் நல்ல திருப்பங்களைச் சந்திக்கலாம். வாடிக்கையாளர்களிடம் நிலுவையை வசூலிப்பீர்கள். கூட்டுத்தொழிலில் இருந்த மந்தமான நிலை மாறும். மூலதனத்தை அதிகரிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். தொலைபேசி மூலம் வரும் செய்தி திருப்பத்தை ஏற்படுத்தும். கலைத்துறையைச் சேர்ந்தவர்கள் பல்வேறு விருதுகளையும், பாராட்டுக்களையும் பெறுவர். பங்குச்சந்தை லாபம் ஈட்டும்.

பரிகாரம்:- இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை விநாயகருக்கு அருகம்புல் மாலை சூட்டி வழிபாடு செய்யுங்கள்.


Next Story