மேஷம் - வார பலன்கள்


மேஷம் - வார பலன்கள்
x
தினத்தந்தி 16 Jun 2023 1:10 AM IST (Updated: 16 Jun 2023 1:14 AM IST)
t-max-icont-min-icon

சிறப்பான சிந்தனை நிறைந்த மேஷ ராசி அன்பர்களே!

சில செயல்களில் தளர்வு ஏற்பட்டு சிந்தனையைக் கிளறும். பணவரவு திட்டமிட்டபடி வந்துசேரும். எதிர்பார்த்த பலன்களை அடைய முயற்சிப்பீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகளின் கெடுபிடி இருந்தாலும், வேலைகள் சிரமமில்லாமல் நடைபெறும். அவசியமான வேலை ஒன்றை விரைவாகச் செய்து கொடுக்க வேண்டியதிருக்கும்.

சொந்தத் தொழில் செய்பவர்கள், இரவு - பகல் பாராமல் வாடிக்கையாளரின் பணியைச் செய்து முடிப்பார்கள். வேலைக்குத் தக்க வருமானம் வந்துசேரும். கூட்டுத் தொழில் வியாபாரம் சுமாராக நடைபெற்றாலும், லாபம் குறையாது. பணியாளர்களைக் கண்காணித்து வேலைகளை விரைந்து முடிக்க அறிவுறுத்துவீர்கள். குடும்பத்தில் புதிய ஆடை, ஆபரண சேர்க்கையால், பெண்களுக்கு உற்சாகம் ஏற்படும். கலைஞர்கள், பிரபல நிறுவனத்தில் ஒப்பந்தங்களை பெறுவர்.

பரிகாரம்:- இந்த வாரம் புதன்கிழமை லட்சுமி நரசிம்மருக்கு துளசி மாலை சூட்டி வழிபாடு செய்யுங்கள்.


Next Story