மேஷம் - வார பலன்கள்
தன்னம்பிக்கை மிகுந்த மேஷ ராசி அன்பர்களே!
நெருங்கிய நண்பர்கள் உதவியுடன் முக்கியமான சில காரியங்களை வெற்றிகரமாகச் செய்து முடிப்பீர்கள். பணவரவுகள் கைக்கு வந்து சேரும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த சில சலுகைகளை உயர் அதிகாரிகளின் மூலம் பெறலாம். அலுவலகத்திற்கு புதியதாக வரும் நபரிடம் ரகசியங்களைப் பரிமாறிக் கொள்ள வேண்டாம்.
சொந்தத் தொழிலில் எதிர்பார்த்த ஆதாயம் பெற முடியும். கூட்டுத் தொழிலில் அதிக லாபம் பெற கூட்டாளிகளுடன் கவனமாக ஆலோசிக்க வேண்டி வரும். வியாபாரத்தை மாற்றி அமைக்கத் திட்டமிடுவீர்கள். முடிவு எடுப்பதில் நிதானம் தேவை. குடும்பத்தில் செலவுகள் இருந்தாலும் மகிழ்ச்சிக்குக் குறைவிருக்காது. பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் குதூகலமான வாரம் இது. மங்கல நிகழ்ச்சிகள் சந்தோஷம் தரும். கலைத்துறையினர் நல்ல திருப்பத்தைக் காண்பார்கள்.
பரிகாரம்:- இந்த வாரம் சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு பவளமல்லியால் அர்ச்சனை செய்து வணங்குங்கள்.